சார்... எப்ப ரோடு போடுவீங்க? குண்டும் குழியுமான சாலை பற்றி மக்கள் கேள்வி

குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உள்பட்ட பெரியார் நகர் பகுதியில் இருந்து தாமரைக் குளம் செல்லும் சாலை உள்ளது . இது சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிலான சாலை ஆகும். இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது இதனால் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாலையின் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டு விலை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
மேலும், சாலையில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் சிரமப்படுகின்றனா். அதிலும் குறிப்பாக மழை நீர் தேங்கினால் எங்கு பள்ளம் உள்ளது என தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் வருவோர் கீழே விழுந்து காயங்களுடன் செல்வது தொடர்கதையாக உள்ளது.
குடியிருப்பு வாசிகள் அவசர தேவைக்கான 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் செல்ல வழியில்லாமல் உள்ளது.
அதிலும் முதியவர்கள் கர்ப்பிணிகள் இவர்களின் அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த குண்டும் குழியுமான சாலையில் தான் செல்ல வேண்டும் . இதனால் இந்த சாலைக்கு எந்த வாகனமும் கூப்பிட்டாலும் வருவதில்லை என அங்கு குடியிருப்போர் தெரிவிக்கின்றனர்.
மேலும் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர், சாலையிலும் வீடுகளிலும் தேங்கி நிற்கும் அவலமும் ஏற்பட்டு வருகிறது. முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, பேரூராட்சி நிா்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். இதனால், மாவட்ட நிா்வாகம் சாலையை கண்காணித்து சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள், முள்புதா்களை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu