செங்கம் நகர தி.மு.க. சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார் கிரி எம் எல் ஏ
செங்கம் நகர தி.மு.க. சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த மாபெரும் கண் சிகிச்சை முகாமிற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி முகாமை துவக்கி வைத்தார்.
இந்த முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ,பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ,மாவட்ட திமுக அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
தண்டராம்பட்டில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை கிரி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தண்டராம்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைக்காப்பு மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், தாசில்தார் அப்துல் ரகூப், வட்டார மருத்துவ அலுவலர் செலின் மேரி, மருத்துவ அலுவலர் சத்தியா, ஒன்றிய செயலாளர் கோ.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக செங்கம் கிரி எம்.எல்.ஏ.கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில்,
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததோடு சொத்தில் சம உரிமை சட்டத்தையும் கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கருணாநிதி ஆவார்.
பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது திருமண நிதி உதவி வழங்கினார். பெண் பிள்ளைகள் அதிகம் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இதனை வழங்கினார்.
அவரது வழியில் பெண்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்க புதுமைப்பெண் திட்டம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறார். கர்ப்பிணிகளுக்கு 200 ரூபாயில் இருந்து இன்று 18 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என சட்டமன்ற உறுப்பினர் கிரி பேசினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
தட்டு, டம்ளர் சொந்த செலவில் வழங்கிய எம்எல்ஏ
செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு மாணவர்களுக்கு தேவையான தட்டு மற்றும் டம்ளர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜீலு, அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார் வரவேற்றார்.
இதில் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட 110 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்கு மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் தட்டு மற்றும் டம்ளர் உள்ளிட்ட பொருட்களை மு.பெ.கிரி எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜீவானந்தம், பரிமளா உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu