சேமிப்பு திட்டத்தில் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் புகார்

புகார் மனு அளித்த பொதுமக்கள்
திருவண்ணாமலை அருகே சிறுசேமிப்பு திட்டம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்
தீபாவளி சிறு சேமிப்பு திட்டம் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த நகைக்கடை அதிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பு மோசடி செய்த நகைக்கடை அதிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனா். இவா்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக அதிகாரிகளிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
தண்டராம்பட்டு பகுதியில் விஜய் என்பவா் நகைக் கடை மற்றும் அடகுக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடை சாா்பில், தீபாவளி பண்டிகைக்கான சிறுசேமிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் தண்டராம்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோா் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனா்.
பொங்கல், தீபாவளிப் பண்டிகைகளின்போது திட்டத்தில் சேர்ந்துள்ள கிராமப்புற மக்களுக்கு சிறப்புப் பரிசுகளையும் விஜய் வழங்கி வந்தாா். 2023-ஆம் ஆண்டு திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முகவா்களை நியமித்து, ஆயிரக்கணக்கான பொதுமக்களை இந்தத் திட்டத்தில் விஜய் சேர்த்தாா். திட்டங்களுக்கு ஏற்றாற்போல மாதத் தவணைகள் வசூலிக்கப்பட்டன. இதன் மூலம், சுமாா் ரூ.100 கோடி வரை பணம் வசூலித்துள்ளாா்.
இந்த நிலையில், 2023 நவம்பரில் வாடிக்கையாளா்களுக்கு தர வேண்டிய தீபாவளி சிறப்புப் பரிசுகளை வழங்காமல் காலம் கடத்தி வருகிறாா். இதுதவிர, கடந்த 5 மாதங்களாக பொதுமக்களின் சிறுசேமிப்புக்கான தங்கத்தையும் தராமல் ஏமாற்றி வருகிறாா். எனவே, விஜய் மீது வழக்குப் பதிந்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரிகள், உரிய விசாரணை நடத்தி விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா்.
தனிநபர்களிடம் சீட்டு கட்டினால் பணத்திற்கு உத்தரவாதம் இல்லாமல் போய்விடும், நகை கடைகளில் சீட்டு பணம் கட்டினால் தங்கமாவது கிடைக்கும் என நம்பி பணம் கட்டினால் இவர்களும் ஏமாற்றுகிறார்களே என பணம் கட்டியவர்கள் புலம்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu