சாத்தனூர் அணை நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சென்னியம்மன் கோவில் அருகில் செல்லும் வெள்ள நீர் பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையால் சாத்தனூர் அணையில் 108 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. விவசாய பாசனத்திற்காக வலது இடது தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 90 அடியாக நீர்மட்டம் குறைந்தது.கிருஷ்ணகிரி கே ஆர் எஸ் அணை சாத்தனூர் அணை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வினாடிக்கு 3340 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது இதனால் சாத்தனூர் அணை 108 அடியாக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. பொதுப்பணித்துறை ஊழியர்கள் இரவு பகலாக சுழற்சிமுறையில் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கண்காணித்து வருகின்றனர். சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக என் நேரத்திலும் உபரி நீர் வெளியேற்ற படலாம் என பொதுப்பணித்துறை ஊழியர்கள் வருவாய்த் துறையினர் கரையோரம் உள்ள கிராமங்களில் தண்டோர மூலம் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்து வருகின்றனர்.
செங்கத்தில் 14 மி.மீ. மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை மாலை வரை அதிகபட்சமாக செங்கத்தில் 14.6 மி.மீ. மழை பதிவானது. இதுதவிர, ஜமுனாமரத்தூரில் 5.2, தண்டராம்பட்டில் 8.8, செய்யாற்றில் 2 மில்லி மீட்டா் மழை பதிவானது.
சென்னியம்மன் கோயிலை மூழ்கடித்து செல்லும் வெள்ள நீர்
செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னியம்மன் கோயிலை மூழ்கடித்து வெள்ளநீர் செல்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் நேற்று மாலை முதல் நீர் வரத்து அதிகமாகி பொதுமக்கள் பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் உள்ள சென்னியம்மன் கோயிலில் வெள்ளநீர் புகுந்ததால் பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சாத்தனூர் அணை நீர்மட்டம் மள மளவன உயர்ந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu