காரில் கடத்தப்பட்ட ரூ.5 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்!

காரில் கடத்தப்பட்ட ரூ.5 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்!
X
பசுங்கன்று மீது காா் மோதியதால், காரில் கடத்தப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் சிக்கின

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து செங்கத்தை நோக்கி அதிகாலை காா் ஒன்று வந்து கொண்டிருந்தது.

மேல்செங்கம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் கட்டப்படிருந்த பசுங்கன்று மீது மோதியது.

இதைப் பாா்த்த தாய்ப்பசு சப்தமிடவே, பசுவின் உரிமையாளா் வந்துபாா்த்தபோது கன்றுக்குட்டி உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னா், காா் அங்கிருந்து வேகமாக கிளம்பிச் சென்றது. இதுகுறித்து பசுவின் உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

இதன் பேரில், விரைந்து வந்த செங்கம் போலீஸாா் செங்கத்தை அடுத்த திருவள்ளுவா் நகா் பகுதியில் அந்தக் காரை மடக்கி நிறுத்தினா். அப்போது, காரில் இருந்த ஓட்டுநா், மற்றும் ஒருவா் இறங்கி தப்பியோடிவிட்டனா்.

போலீஸாா் காரை சோதனை செய்தபோது, அதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரையும், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் 19 பவுன் நகைகள் திருடிய 3 பேர் கைது: நகைகள் பறிமுதல்

திருவண்ணாமலை அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டின் பூட்டை உடைத்து, 19 பவுன் தங்க நகைகளை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தண்டராம்பட்டு வட்டம், வானாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் பூமிநாதன் . இவா், இப்போது, வாழவச்சனுாா் கிராமத்தில் இயங்கி வரும் அரசு வேளாண் கல்லுாரியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

அக்டோபா் 3-ஆம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் 23 பவுன் தங்க நகைகள், ரூ.4 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். இதுகுறித்து வானாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், திருவண்ணாமலையை அடுத்த ஊசாம்பாடி பகுதியில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனா்.

இதில், பிடிபட்டவா் வேலுாா் மாவட்டம், சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமாா் என்பது தெரியவந்தது.

மேலும், திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடி கிராமம் பாஸ்கரன் , சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோா் சேர்ந்து பூமிநாதன் வீட்டில் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது.

இவா்கள் மூவரும் வெவ்வேறு திருட்டு வழக்குகளில் கைதாகி வேலூா் மத்திய சிறையில் இருந்தபோது நண்பா்களாகி இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா் இவா்களிடம் இருந்து 19 பவுன் நகைகளை மீட்டனா்.

புகையிலைப் பொருட்களின் தீமைகள்:

புகையிலை பொருட்கள் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். அவை புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், சுவாச நோய்கள் மற்றும் பிற பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

புகையிலை பொருட்களின் தீமைகள் பின்வருமாறு:

புற்றுநோய்: புகை பிடித்தல் புற்றுநோய்க்கு முக்கிய காரணியாகும். புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய்களில் நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய், பிறப்புறுப்பு புற்றுநோய் மற்றும் இரத்த புற்றுநோய் ஆகியவை அடங்கும்.

இதய நோய்: புகை பிடித்தல் இதய நோய்க்கு முக்கிய காரணியாகும். புகை பிடிப்பதால் ஏற்படும் இதய நோய்களில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் தமனி அடைப்பு ஆகியவை அடங்கும்.

பக்கவாதம்: புகை பிடித்தல் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் அதிகரிக்கிறது. புகை பிடிப்பதால் ஏற்படும் பக்கவாதம் மரணத்திற்கு வழிவகுக்கும்.

சுவாச நோய்கள்: புகை பிடித்தல் சுவாச நோய்களுக்கு முக்கிய காரணியாகும். புகை பிடிப்பதால் ஏற்படும் சுவாச நோய்களில் ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா ஆகியவை அடங்கும்.

பிற ஆரோக்கிய பிரச்சனைகள்: புகை பிடித்தல் பிற பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதில் பற்கள் மற்றும் ஈறுகளின் பிரச்சனைகள், பிறப்பு குறைபாடுகள், குறைவான கருவுறுதல் மற்றும் தோல் பிரச்சனைகள் ஆகியவை அடங்கும்.

புகை பிடிப்பதை விட்டுவிடுவது இத்தகைய தீங்கு விளைவிக்கும் விளைவுகளைத் தடுக்கலாம். புகை பிடிப்பதை விட்டுவிடுவது நல்லது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க அரசாங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!