/* */

‘ஜிஎஸ்டி என்ற பெயரில் பகிரங்க கொள்ளை’- இந்திய கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு

ஜிஎஸ்டி என்ற பெயரில் நாட்டு மக்களிடமிருந்து பகிரங்க கொள்ளை நடக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

HIGHLIGHTS

‘ஜிஎஸ்டி என்ற பெயரில் பகிரங்க கொள்ளை’- இந்திய கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு
X

திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாநில செயலாளர் முத்தரசன்

ஜிஎஸ்டி என்ற பெயரில் நாட்டு மக்களிடமிருந்து பகிரங்கமாக கொள்ளையடிக்கப்படுகிறது, என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் மதச்சார்பற்ற ஜனநாயக கட்சியின் இந்திய கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்றது .

அதனைத் தொடர்ந்து மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி பகிரங்க முயற்சி எடுத்தாலும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவது சாத்தியமே கிடையாது.

காரணம் தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்தியா முழுவதும் செல்கிறார். தமிழகத்திற்கு ஏழு முறை வந்துள்ளார். மீண்டும் வருவதாக அறிவித்திருக்கிறார். எந்த பொதுக்கூட்டத்திலும் கடந்த காலங்களில் நடந்த தேர்தல் வாக்குறுதிகளில், என்னென்ன வாக்குகள் நிறைவேற்றி இருக்கிறேன் என்பது இதுவரை ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக கூறினார். அப்படி பார்த்தால் பத்தாண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். விவசாயிகள் கொடூரமான முறையில் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர். தொழிலாளர்கள் நுாறாண்டு போராடி பெற்ற உரிமைகளும், சட்டங்களும் மோடி ஆட்சியில் பறிக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில் எதுவும் இயங்க முடிவதில்லை.

ஜிஎஸ்டி என்ற பெயரில் நாட்டு மக்களிடமிருந்து பகிரங்கமாக கொள்ளையடிக்கப்படுகிறது. பொதுவாக ஏழைகளுக்கு விதிக்கப்படும் வரி குறைக்க வேண்டும். பெரும் நிறுவனங்களின் வரி அதிகரிக்க வேண்டும். இதுதான் ஒரு அரசு நியாயமான முறையில் பின்பற்ற வேண்டும். தனது அரசியல் தோல்வியை மூடி மறைப்பதற்கு மதம், ஜாதி கடவுள் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் என்றைக்கும் இல்லாத அளவிற்கு ஒரு கடுமையான நெருக்கடியை மோடி அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது. சர்வாதிகாரத்துக்கு எதிராக நடக்கும் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.

அதிமுக பகல் வேஷம் போடுகிறது. கடந்த பத்து ஆண்டு காலமாக பாஜக அரசு மேற்கொண்ட அனைத்து தவறுக்கும் ஆதரவாக இருந்தது. குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராக மூன்று சட்டங்கள் லோக்சபாவில் நிறைவேற்றியபோது அதிமுக ஆதரவாக வாக்களித்தது. ஸ்டேட் பாங்க், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்றவைகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முடுக்கிவிடப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பி முடக்கப்பட்டது. இந்த நாடாளுமன்ற தேர்தல் இரண்டாவது சுதந்திர போராட்டம் போன்றது. பாசிசம் தோற்கடிக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

தேர்தல் காரணமாக சிலிண்டர் விலையை குறைத்து மோடி கபட நாடகம் ஆடுகிறார் இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர் சுந்தரேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 3 April 2024 11:06 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  4. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  6. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  8. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  9. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்