கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள்
செங்கம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆர்டிஇ இலவச கல்வி சட்டத்தின் கீழ் கூடுதல் கட்டணம் வசுலிப்பதாக கூறி பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்யாறு மேம்பாலம் அருகே இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2024- 25 கல்வி ஆண்டில் ஆர்டிஇ இலவச கல்வி சட்டத்தின் கீழ் மாணவர்களை 25 விழுக்காட்டில் சேர்க்கப்பட்ட மாணவா்களின் பெற்றோர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் சாலைகள் சென்ற அனைத்து வாகனங்களையும் சிறை பிடித்து சுமார் அரை மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகன போக்குவரத்து பாதிப்படைந்து பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் மறியல் செய்வதின் நோக்கம் குறித்து கேட்டறிந்து பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு நிரந்தர தீர்வு பெற்று தருகிறோம் என தெரிவித்த போது சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள் ஆவேசமடைந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்கம் வட்டாட்சியா் முருகன், மற்றும் காவல்துறையினர் பள்ளி நிர்வாகம் சாலை மறியல் ஈடுபட்ட பெற்றோர்களிடம் நேரில் வந்து அவர்களை பள்ளி வளாகத்திற்குள் அழைத்து சென்று 2024-25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் ஆர்டிஇ குறித்து விளக்கம் தெரிவித்து சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறியதாவது ;
இந்த தனியாா் பள்ளியில் அரசு அறிவித்த 25 சதவீத இலவச இடஒதுக்கீட்டின் மூலம் பயிரலும் மாணவா்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாகவும், அதே நேரத்தில் மாணவா்களின் கல்விக் கட்டணத்தை இரண்டு தவணையாகவும் நிா்வாகம் செலுத்தவேண்டுமென கராராக கூறினார்கள்.
இதனால், கல்விக் கட்டண சலுகையில் பயிலும் மாணவா்களின் பெற்றோா், அரசு அறிவித்ததைவிட அதிகமாக கட்டணம் எதற்கு கட்டவேண்டுமென்று ஒருபக்கம், இதுவரை 4 தவணை, 5 தவணையாக கட்டியிருந்த நிலையில் தற்போது இரண்டு தவணையாக பணத்தை கட்டமுடியாது என பெற்றோர்களாகிய நாங்கள் நிர்வாகத்திடம் முறையிட்டோம்.
அதற்கு, தற்போது இதுதான் இந்தப் பள்ளியின் நடைமுறை. எனவே, பணத்தை கட்டவேண்டுமென பள்ளியின் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். எங்களால் இரண்டு தவணையில் பணத்தை செலுத்த முடியவில்லை, எப்பொழுதும் போல் நான்கு அல்லது ஐந்து தவணையாக கட்டி விடுகிறோம் எனக் கூறினோம். அதற்கு அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறினார்கள் எனத் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu