செங்கம், கலசப்பாக்கம் பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

செங்கம், கலசப்பாக்கம் பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
X

செங்கத்தில் சாலை ஒன்றில் தேங்கியுள்ள மழை நீர்.

செங்கம் மற்றும் கலசப்பாக்கம் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக சாலையில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கழிவுநீா்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீா் சாலையில் தேங்குவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் - போளூா் சாலையில் இருந்து பிரியும் பெருமாள் கோவில் தெரு முகப்புப் பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள கழிவுநீா்க் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழை நேரத்தில் அப்பகுதியில் தண்ணீா் செல்லமுடியாமல் தேங்கி நிற்கிறது . இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் , வயதானவர்கள் மற்றும் பள்ளி சிறுவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கலசப்பாக்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நயம்பாடி கிராமத்தில் சுமார் 3, 000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர், இந்த பகுதியில் உள்ள சாலை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பழுதடைந்துள்ளதால் மழைக்காலங்களில் அப்பகுதியில் உள்ள வயதானவர்கள் மற்றும் பள்ளி சிறுவர்கள் தேங்கி நிற்கும் மழை நீர் மற்றும் சேற்றில் சிக்கி கீழே தவறி விழும் நிலை ஏற்படுவதாகவும் இதனால் பலருக்கு கை கால் முறிவு ஏற்படுவதாகவும்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையினால் நயம்பாடி கிராமத்தில் சாலை முழுவதுமாக சேரும் சகதியமாக காட்சியளிக்கிறது.

இந்த சேற்றில் சிக்கி நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும். வயதானவர்கள் மற்றும் பள்ளி சிறுவர்களுக்கு முறையான சாலை இல்லாததால் பல இன்னல்களுக்கு ஆளாகுவதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென நேற்று மாலை நயம் பாடி கூட்ரோடு அருகில் பள்ளி வாகனம் பால் வாகனம் அரசு பேருந்து உள்ளிட்டவைகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி மருத்துவ வசதி என அடிப்படை வசதிகள் செய்து தர கோரி துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த சாலை மறியல் சுமார் 2 மணி நேரம் நீடித்தது இதனால் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் செல்லக்கூடிய மாணவ மாணவியர் பால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது துறை சார்ந்த அதிகாரி ஒருவர் இந்த சாலை ஊராட்சியில் உள்ளதா பொதுப்பணி துறையில் உள்ளதா அல்லது நெடுஞ்சாலை துறையில் உள்ளதா என்று தெரியவில்லை என்று தெரிவித்தவுடன் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாலை எந்த துறையின் கீழ் வருகிறது என்று தெரியாமல் நாங்கள் ஒவ்வொரு முறையும் மனு அளிக்கும் போதும் சாலை போடுவதற்காக அளவு எடுக்கிறோம் என்று கூறி அளவு எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியவுடன் அந்த அதிகாரி பதில் கூற முடியாமல் திணறினார்.

அதிகாரிகள் உடனடியாக பள்ளமாகவும் மழைநீர் தேங்கியுள்ள உள்ள சாலைகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு சரி செய்து தார் சாலை போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் கைவிட்டு களைந்து சென்றனர்.

Tags

Next Story
ai tools for education