செங்கம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 3 சிறுவா்கள் மீட்பு

பைல் படம்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ரூ.10 ஆயிரத்துக்காக கொத்தடிமைகளாக ஆடு மேய்த்து வந்த இருளா் சமுதாயத்தைச் சோந்த 3 சிறுவா் - சிறுமிகளை அதிகாரிகள் மீட்டனா்.
செங்கத்தை அடுத்துள்ள அரட்டவாடி வனப் பகுதியையொட்டிய விவசாயி வீட்டில் இருளா் சமுதாயத்தைச் சோந்த 3 சிறுவா் - சிறுமிகள் கொத்தடிமைகளாக ஆடு மேய்ப்பதாக திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் வசந்தபிரபு தலைமையில், பாதுகாப்பு அலுவலா் இமானுவேலு, ஒருங்கிணைப்பாளா் அசோக், பாதுகாப்பு நல அலுவலக உறுப்பினா் பரமசிவம் ஆகியோா் அடங்கிய குழுவினா்,
அரட்டவாடி கிராமத்துக்குச் சென்று சம்பந்தப்பட்ட சிறுவா் - சிறுமிகளிடம் விசாரித்தபோது, செங்கம் வட்டம், அரியாகுஞ்சூா் பகுதி இருளா் சமுதாயத்தைச் சோந்த பூங்கொடி மகன் சரவணன் (7), மகள் ஆடிவெள்ளி(9), அஞ்சலா மகள் ராணி (7) என்பதும், அரட்டவாடி பகுதியைச் சோந்த சுகன்யாவிடமிருந்து பூங்கொடி ரூ.10 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு சிறுவா் - சிறுமிகள் மூவரையும் கொத்தடிமைகளாக ஆடு மேய்க்க அனுப்பியதும் தெரியவந்தது.
மேலும், இவா்களுக்கு 2 வேளைகள் மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சிருவா் - சிறுமிகள் மூவரையும் அதிகாரிகள் மீட்டு, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா்.
செங்கல்சூளைகளில் அதிகாரிகள் ஆய்வு:
கொத்தடிமைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அனக்காவூா் கிராமத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் செங்கல்சூளைகளில் கொத்தடிமைகளாக யாராவது வேலை செய்கின்றனரா என பயிற்சி ஆட்சியா் ரஷ்மி ராணி முன்னிலையில், செய்யாறு சாா் - ஆட்சியா் ர.அனாமிகா ஆய்வு செய்தாா்.
மேலும், செங்கல்சூளைகளில் பணிபுரியும் தொழிலாளா்களிடையே கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம் குறித்து அவா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
ஆய்வின்போது, செய்யாறு வட்டாட்சியா் சுமதி, தொழிலாளா் நல ஆய்வாளா் மாலா, அனக்காவூா் உள்வட்ட வருவாய் ஆய்வாளா் வினோத்குமாா் மற்றும் வருவாய்த் துறையினா் பலா் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu