செங்கம் கோவில்களில் திருப்பணிகள் துவக்கம்: எம்எல்ஏ பங்கேற்பு

செங்கம் கோவில்களில் திருப்பணிகள் துவக்கம்: எம்எல்ஏ பங்கேற்பு

கோவில் திருப்பணியை துவக்கி வைத்த கிரி எம் எல் ஏ

செங்கம் முருகர் கோயில் மற்றும் பச்சையம்மன் கோயில் திருப்பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி துவக்கி வைத்தார்.

செங்கம் முருகர் கோயில் மற்றும் பச்சையம்மன் கோயில் திருப்பணிக்காக இந்து சமய அறநிலை துறை மூலம் ரூ 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து திருப்பணி பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை ஸ்ரீ பாலசுப்ரமணியர் திருக்கோயில் மற்றும் செங்கம் செய்யாற்று கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ மன்னார்சாமி உடனுறை ஸ்ரீ பார்வதி அம்சமான ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில்களுக்கு திருப்பணிகள் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதன் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு கோவில் கட்டுமானம் பணி மற்றும் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு (பாலாலயம்) கோவில் திருப்பணிகள் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கும், இந்து சமய அறநிலைத்துறைக்கும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கோரிக்கை வைத்தார்.

சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று செங்கம் அடுத்த மண்மலை குன்று மேடு ஸ்ரீ பாலசுப்பிரமணிய திருக்கோயில் திருப்பணிகள் செய்வதற்காக ரூபாய் 13 லட்சம் மற்றும் செங்கம் தலைவநாயக்கன்பேட்டை செய்யாற்றங்கரை ஓரம் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோயில் திருப்பணிகள் செய்வதற்காக ரூபாய் 17 லட்சம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மலைக்குன்று பாலசுப்பிரமணியர் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு பூமி பூஜை செய்து திருப்பணிகளை துவக்கி வைத்தார்.

இதே போன்று பச்சையம்மன் ஆலயத்திலும் பாலாலயம் செய்யப்பட்டு கோயில் திருப்பணிகள் பணியை சட்டமன்ற உறுப்பினர் கிரி துவக்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், ஏழுமலை, அறநிலையத்துறை ஆணையாளர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் தேன்மொழி, ஆய்வாளர் சத்யா , அறங்காவல் குழு தலைவர், உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சகுந்தலா ராமஜெயம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அறநிலையத்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சந்தியா, ராபின்சன், மீனாசம்பத், இந்திரா நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story