விவசாய பாசனத்திற்காக குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

விவசாய பாசனத்திற்காக குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
X

விவசாய பாசனத்திற்காக குப்பநத்தம் அணையில் இருந்து தண்ணீரை துணை சபாநாயகர்  ஸ்விட்ச் ஆன் செய்து  திறந்து வைத்தார்.

விவசாய பாசனத்திற்காக குப்பநத்தம் அணையில் இருந்து தண்ணீரை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் கிரி (செங்கம்), சரவணன் (கலசபாக்கம்) உள்ளிட்டோர் முன்னிலை வகித்து மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

அதன்பின், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் ஜவ்வாதுமலை அடிவாரப்பகுதி குப்பநத்தம் அணையின் முழு நீர்மட்டம் 59.05. அடி ஆகும். நீர் தேக்கத்தின் முழு கொள்ளளவு 700 மில்லி கன அடி. தற்போது அணையில் 593.08 அடி நீர் இருப்பு ஆகும். பாசனத்திற்காக 47 ஏரிகளுக்கு நாள் ஒன்றுக்கு 110 கன அடி வீதம் 18.5.2023 காலை 10 மணி வரை 61 நாட்களுக்கு 577.80 மில்லி கன அடி தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன்மூலம் 9,432.76 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். நீரை சிக்கனமாக பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட அனைத்து விவசாயிகளும் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே தண்ணீரை சிக்கனமாக வீணாக்காமல் பாதுகாத்து பாசனத்தில் பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், குப்பநத்தம் அணை உதவி பொறியாளர் ஹரிகரன், தாசில்தார் முனுசாமி, நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், ஏழுமலை, மனோகரன், மாவட்ட கவுன்சிலர்கள் செந்தில்குமார், ராமஜெயம், செங்கம் பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!