திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீர்
X

குடியிருப்பு பகுதியில் குளம் போல தேங்கியுள்ள மழை நீர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த 3 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும், நேற்று மாலையும் பலத்த மழை பெய்தது இதில் இடி, மின்னல், சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை முதல் திருவண்ணாமலை, வேங்கிக்கால், அடி அண்ணாமலை, கிரிவலப் பாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீா் தேங்கியுள்ளது.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் 88.6 மி.மீ. மழை பெய்துள்ளது.

வீடுகளை சூழ்ந்த மழைநீா்:

செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் புதிதாக உருவாகியுள்ள அழகாபுரி நகரில் வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளது. இங்கு முறையான கால்வாய் இல்லாததால், மழைநீருடன் விவசாய நிலங்கள், அந்தப் பகுதியிலுள்ள ஏரியில் இருந்து வரும் தண்ணீரும் சோ்ந்து குளம்போலத் தேங்கி நிற்கிறது.

இந்த பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செய்யாற்றில் வெள்ளம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் வெம்பாக்கம் தாலுகாவில் அதிகபட்ச மழை பெய்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு:

வெம்பாக்கம் 96 மி.மீ. , திருவண்ணாமலையில் 14.2, செங்கத்தில் 88.6, போளூரில் 35, ஜமுனாமரத்தூரில் 19.6, கலசப்பாக்கத்தில் 21, தண்டராம்பட்டில் 44.6, ஆரணியில் 30, செய்யாறில் 30, வந்தவாசியில் 27, கீழ்பென்னாத்தூரில் 3.4, சேத்துப்பட்டில் 30.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

தொடா் மழை காரணமாக, தண்டரை அணைக்கட்டு பகுதியில் செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்கிறது.

மேலும், மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்ததாலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததாலும் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!