சித்திரை முதல் நாளிலே பெய்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

சித்திரை முதல் நாளிலே பெய்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி
X
திருவண்ணாமலை, செங்கம் சுற்று பகுதியில் அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுகிறது

திருவண்ணாமலை, செங்கம், சுற்று பகுதியில் அதிகாலை முதல் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் சுற்றுப்பகுதியில் கோடை வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுகிறது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆடையூர், அத்தியேந்தல், நல்லவன்பாளையம், செங்கம், சுற்றுப்பகுதியில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் மழை பெய்தது வருகிறது. கடந்த மாசி, பங்குனி ஆகிய இரண்டு மாத காலமாக பொதுமக்களை கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் சித்திரை மாதம் தொடக்கத்திலேயே மழை தொடங்கியதால் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.

இதனால் சுற்றுப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு