திருவண்ணாமலை மாவட்டத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள்: காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள்: காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம்
X

செங்கத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவை காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடினர்

திருவண்ணாமலை பேகோபுர தெருவிலுள்ள நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி 54வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு தலைமையேற்று நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெற்றிசெல்வன் கட்சி கொடியினை ஏற்றிவைத்து கேக்வெட்டி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு கட்சி தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கியதோடு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் எதிரே அம்பேத்கர் சிலை அருகில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம். பி. 54-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் செங்கம் குமார் தலைமையில் 54 கிலோ கேக் வெட்டி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். இதில் நகர தலைவர் காந்தி மற்றும் வட்டார தலைவர்கள் சுப்பிரமணிய, ரத்தினம், கட்சி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இனிப்பு மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது.

செய்யார்

செய்யார் அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி பிறந்தநாள் பிறந்தநாள் விழாகொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தியின் 54- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலையரசன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தில்லை, நகரத் தலைவர் சந்துரு, ஆகியோர் கட்சி தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர்கள்அமரேசன், சிங்காரவேலு, மோகன்ராஜ், முன்னாள் வட்டாரத் தலைவர் ராஜவேல், மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!