பேருந்து நிறுத்தம் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பேருந்து நிறுத்தம் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பேருந்து நிலையம் அருகே கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள்

பேருந்து நிறுத்தம் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்து நிறுத்தம் அருகே மருத்துவக் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் தேசிய நோய் பரவும் அபாயம் உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் செங்கம் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் இறையூர் பேருந்து நிலையம் உள்ளது.

இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பக்கத்தில் உள்ள திருவண்ணாமலை, கலசப்பாக்கம், செங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் இந்த பேருந்து நிலையத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ நிறுத்தம் பகுதியும் அமைந்துள்ளது.

அஇந்நிலையில் ஆட்டோ நிறுத்தும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள இடத்தில் தினந்தோறும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இறையூர் பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

மேலும் இறையூர் பகுதியில் போலி மருத்துவர்கள் பயன்படுத்தும் மருந்து ஊசி குளுக்கோஸ் போன்ற மருத்துவக் கழிவுகளை தினந்தோறும் கொட்டுவதால் காகம், நாய், கால்நடைகள் அதை தூக்கிச் சென்று பல்வேறு இடங்களில் போடுவதால், ஊசிகள் சிதறி கிடைக்கிறது.

இதனால் அப்பகுதியில் தொற்று நோய் ஏற்படுமா என்ற அச்சத்தில்பொதுமக்கள் உள்ளனர். இப்பகுதி கிராம மக்கள் இறையூர் பஞ்சாயத்தில் புகார் அளித்தும் ஓரிரு நாட்கள் மட்டும் சுத்தம் செய்கின்றனர் .மீண்டும் அந்தப் பகுதியிலேயே குப்பைகள் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது.

எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மருத்துவ கழிவுகளும் குப்பைகளையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ கழிவுகளை அங்கு கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read MoreRead Less
Next Story