செங்கம்: ஓட்டலுக்குள் புகுந்து ரகளை

செங்கம்: ஓட்டலுக்குள் புகுந்து ரகளை
X
செங்கம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஹோட்டலுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு....


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வீரானந்தல் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (40) என்பவர் கடந்த மூன்றாண்டு காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இவர் இன்று திடீரென செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் புகுந்து சமையல்காரரிடம் இருந்து வடை சுடும் கரண்டியை பிடுங்கி அங்கு இருந்தவர்களை தாக்கி, அதனைத் தொடர்ந்து ஹோட்டலில் டேபிள்களை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்த ஓட்டல் ஊழியர்கள் மற்றும் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

மேலும் ஹோட்டலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அங்கு நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த பொதுமக்களையும் தாக்க தொடங்கியுள்ளார். அங்கு நின்றிருந்த பொதுமக்கள் அவரை பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினரும் அவரை பிடிக்க முயற்சி செய்தனர் யாருக்கும் கட்டுக்கடங்காத அந்த சைக்கோ மனிதர் அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அருகிலிருந்த மரக்கட்டைகளை கொண்டு திருப்பி தாக்கி பிடிக்க முயற்சி செய்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் செங்கம் காவல்துறையினரின் கடுமையான முயற்சிக்குப் பின்பு மனநிலை பாதிக்கப்பட்ட நபர் பிடிபட்டார்.


பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை செங்கம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது இதில் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறு காயங்களுடன் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவரை பிடிக்க சென்ற போலீசாருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!