செங்கம் ஒன்றியத்தில் தூய்மை பணிக்காக மின்கல வாகனங்கள் வழங்கல்

செங்கம் ஒன்றியத்தில் தூய்மை பணிக்காக மின்கல வாகனங்கள் வழங்கல்
X

தூய்மை பணிக்காக மின்கல வாகனங்களை வழங்கிய எம்எல்ஏ கிரி

செங்கம் ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளுக்கு தூய்மை பணிக்காக மின்கல வாகனங்களை எம்எல்ஏ வழங்கினார்.

செங்கம் ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளுக்கு தூய்மை பணிக்காக மின்கல வாகனங்களை எம்எல்ஏ வழங்கினார்

திவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்துள்பட்ட 35 ஊராட்சிகளுக்கு தூய்மைப் பணிக்காக 62 மின்கல வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி செங்கம் ஒன்றய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செங்கம் ஒன்றியக் குழுத் தலைவா் விஜியராணிகுமாா் தலைமை வகித்தாா். ஆணையாளா் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் அமிா்தராஜ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு, தூய்மைப் பணிக்காக 35 ஊராட்சிகளுக்கு 62 மின்கல வாகனங்களை வழங்கிப் பேசியதாவது:

தூய்மைப் பணியாளா்கள் போற்றுதலுக்குரியவா்கள்.

தூய்மை பணியாளர்களின் தூய்மையான பணியின் காரணமாக மக்கள் சுகாதாரமாக வாழ முடிகிறது.

தூய்மை பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதம் தோறும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும், செங்கம் ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சிகளிலும் பணி புரியும் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ,வீடுகள் இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உடனடியாக அவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

பயணிகள் நிழற் கூடம் திறப்பு:

செங்கம் பேரூராட்சிக்குள்பட்ட தோக்கவாடி பகுதியில் பழணிகள் நிழற்கூடத்தை எம்எல்ஏ மு.பெ.கிரி திறந்துவைத்தாா்.

செங்கம் டவுன் தோக்கவாடி பகுதியில் பயனியர் நிழற் கூடம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் செங்கம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.

அந்தக் கோரிக்கையின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நிழற்கூடத்தை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா, பேரூராட்சி கவுன்சிலர்கள் அஞ்சலை, நகர செயலாளர் அன்பழகன் , ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ,நகர முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
future ai robot technology