செங்கத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்: போலீசாருக்கும், விழாகுழுவினருக்கும் வாக்குவாதம்

செங்கத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்: போலீசாருக்கும், விழாகுழுவினருக்கும் வாக்குவாதம்
X

செங்கத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.

செங்கத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் போலீசாருக்கும், விழா குழுவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

செங்கத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. செங்கம் நகரில் ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, தளவாநாயக்கன்பேட்டை, துர்க்கையம்மன் கோவில் தெரு, மேலப்பாளையம், துக்காப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் 23 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று போளூர் சாலை, பஜார்வீதி வழியாக செங்கத்தின் முக்கிய வீதிகள் வழியாக அனைத்து விநாயகர் சிலைகளும் மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ், பாஜக மாவட்ட தலைவர் ஜீவானந்தம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் அருண்குமார், மாநில பாஜக நிர்வாகி ஜம்பு குமார் ,பேரூராட்சி மன்ற பாஜக உறுப்பினர் முரளிதரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் டிரோன் கேமரா மூலம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கண்காணிக்கப்பட்டது. பஜார் வீதியில் மசூதி அருகே விநாயகர் ஊர்வலம் வந்தபோது மேளதாளங்கள் அடிக்க கூடாது என போலீசார் கூறியதால் சிலை அமைப்பு குழுவினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் , அனைவரையும் சமாதானம் செய்தார். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர் முரளிதரன் மேளத்தை வாங்கி அவரது கழுத்தில் அணிந்து மசூதி தெருவில் மேளதாளம் முழங்க ஊர்வலம் சென்றது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!