மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு உள்அரங்கில் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் மாநில அளவிலான 3-வது தகுதி தேர்வு போட்டிகள் 11-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 953 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகள் வயதின் அடிப்படையில் 8 பிரிவுகளாக ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக நடந்தது. இந்த போட்டியை மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் நிறைவு விழா மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தலைவர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார்.
தலைவர் கணேஷ்கவுரவ் வரவேற்றார். தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர் வித்யாசாகர், மாவட்ட வாலிபால் சங்க தலைவர் அரவிந்த்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக அண்ணாதுரை எம்.பி., கிரி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற 364 பேருக்கு ரூ.4 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கினர்.
மேலும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினர். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத்தின் துணைத்தலைவர்கள் அரிகிருஷ்ணன், இளங்கோ, பொருளாளர் ராமஜெயம், ஆலோசகர் சவுந்தர்ராஜன் மற்றும் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் சங்க நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் செயலாளர் கமலகண்ணன் நன்றி கூறினார்.
அரசுப் பள்ளியில் தடகளப் போட்டி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் அரசு தனியார் பள்ளி மாணவிகளுக்கு தாலுக்கா அளவிலான தடைகளை போட்டிகள் நடைபெற்றது
தமிழக பள்ளி கல்வித் துறை, விளையாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற போட்டியை, மேல்செங்கம் அரசு உயா் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சுஜாதா தொடங்கி வைத்தாா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக மேல்பள்ளிப் பட்டு ஓன்றிய கவுன்சிலா் பானுமதி ஜம்புலிங்கம், தலைவா் செல்வராஜ், துணைத் தலைவா் முத்துகுமரன், அந்தனூா் தலைவா் கலைச் செல்வி, மேல்ராவந்தவாடி கூட்டுறவு சங்க செயலாளா் மோகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை சுஜாதா, செங்கம் வட்டார கல்வி அலுவலா் உதயகுமாா் ஆகியோா் பரிசுகள், சான்றிதழை வழங்கினா்.
முன்னதாக, உடற்கல்வி ஆசிரியா் முருகன் வரவேற்றாா். இதில், செங்கம் தாலுக்காவிற்குள்பட்ட 40-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu