/* */

ரூ.23 லட்சம் கையாடல் செய்ததாக தனியார் நிறுவன விற்பனை அதிகாரி கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.23 லட்சம் கையாடல் செய்ததாக தனியார் நிறுவன விற்பனை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

ரூ.23 லட்சம் கையாடல் செய்ததாக தனியார் நிறுவன விற்பனை அதிகாரி கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் தனியார் நிறுவன விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவர் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் விற்பனை மையத்தில் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ராஜி தணிக்கை மேற்கொண்டார்.

அப்போது, சென்னை தலைமை நிறுவனத்திலிருந்து சேத்துப்பட்டு விவசாய இடுபொருள் விற்பனை செய்யும் மையத்திற்கு கடந்த சில மாதங்களாக சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான விவசாய இடுபொருட்கள் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதும், அதில் ரூ.23 லட்சத்தை விக்னேஷ் கையாடல் செய்திருப்பதும் தணிக்கையில் தெரியவந்தது.

இதுகுறித்து மண்டல மேலாளர் ராஜி திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பண மோசடி செய்ததாக விக்னேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 March 2022 1:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்