கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண்

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண்
X
செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தன் கணவருடன் சேர்த்து வைக்கும்படி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

மேல்கரிப்பூர் ஊராட்சியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவருடைய மகள் சுந்தரி சென்னையில் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார் அதே கல்லூரியில் முத்தனூர் பகுதியை சேர்ந்த வேலு என்பவருடைய மகன் சிலம்பரசன் எனபவரும் படித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் சுந்தரி மூன்று மாத கர்பிணியாக இருந்த போது சிலம்பரசன் தனது சொந்த ஊரான முத்தனூர் அழைத்து வந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்துள்ளார். அதனை அறிந்த சிலம்பரசனின் தந்தை வேலு, அந்த பெண்னை பிடிக்கவில்லை என்று கூறி சிலம்பரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சுந்தரியை அவரது அக்கா வீட்டில் விட்டுவிட்டு வந்த சிலம்பரசனுடன் குடும்பத்தோடு தலைமறைவாகியுள்ளார்,

கடந்த நான்கு மாதங்களாக, புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தனது கணவர் தன்னை ஏமாற்றி விட்டு சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டு தர வேண்டும் என்றும் கூறி, துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கடுமையான வெயில் என்றும் பாராமல் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்

தகவலறிந்து வந்த செங்கம் காவல் துணை ஆய்வாளர் யுவராஜ் கர்ப்பிணி பெண்ணிடம் சமரசத்தில் ஈடுபட்டு, இரண்டு நாட்களுக்குள் கணவரை கண்டுபிடித்து சேர்த்து வைப்பதாக உறுதியளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!