420 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் பறிமுதல்

420 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் பறிமுதல்
X

பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட ரூபாய் 4,20,000/- மதிப்புள்ள, 420 கிலோ எடைகொண்ட 14 மூட்டைகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் 420 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் பறிமுதல். மூவர் கைது

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டிக்கு தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் கடத்தப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், செங்கம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணகுமரன் மேற்பார்வையில், தனிப்படை போலீசார் செங்கம் to போளூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த மஹிந்திரா வேன்- TN 29 BE 3616 என்ற பதிவெண் கொண்ட வாகனத்தை மடக்கி சோதனை செய்த போது, வாகனத்தினுள் பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட ரூபாய் 4,20,000/- மதிப்புள்ள, 420 கிலோ எடைகொண்ட 14 மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

வாகனத்தை பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர், மனோகரன், வாகன ஓட்டுனர் இளங்கோ, வாகனத்தின் உரிமையாளர் சக்திவேல் ஆகியோரை கைது செய்து, செங்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

மேலும், பெங்களூரிலிருந்து கடத்தி வர மூளையாக செயல்பட்ட பெங்களூரை சேர்ந்த முஜாப் என்பவரை தனிப்படை காவல்துறையினர் தீவரமாக தேடிவருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!