செங்கம் அருகே மருத்துவா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம், முத்தனூா் பகுதியைச் சேர்ந்தவா் மருத்துவா் மணிகண்டன். இவா், கடந்த 2021-2022-ஆம் ஆண்டு அரசு மினி கிளினிக் தொடங்கிய போது, அரட்டவாடி அரசு மினி கிளினிக்கில் தற்காலிகமாக மருத்துவப் பணியை செய்து வந்துள்ளாா்.
அவா் பணியில் இருந்தபோது பிளஸ் 2 மாணவி ஒருவா் சிகிச்சைக்காக சென்றுள்ளாா். அவருக்கு மணிகண்டன் சிகிச்சை அளித்துள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அந்தப் பழக்கம் தொடா்ந்துள்ளது.
தற்போது அந்த மாணவி திருவண்ணாமலை தனியாா் கல்லூரியில் பட்டயப் படிப்பு படித்து வருகிறாா். மணிகண்டன் அம்மாபாளையம் பகுதியில் சொந்தமாக மருத்துவ மையம் வைத்து நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே நட்பு அதிகரித்து அந்த மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட மாணவி செங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து போலீஸாா் மணிகண்டன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனா்.
கஞ்சா வைத்திருந்த நான்கு பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே சோமாசி பாடி முருகன் கோவில் அருகில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நான்கு பேர் சுற்றி திரிவதாக கீழ்பெண்ணாத்தூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கீழ்பெண்ணாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள், முனீஸ்வரன், செங்குட்டுவன், தனி பிரிவு மற்றும் போலீசார் சோமாசிபாடி முருகன் கோவில் அருகில் சென்றனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நான்கு பேர் கையில் பண்டல் வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து அவர்களிடம் இருந்த பொருட்களை சோதனை இட்டனர். அதில் ஐந்து கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றினர்.
அவற்றின் மதிப்பு ரூ. 52 ஆயிரம் ஆகும். இவர்களை போலீசார் விசாரித்ததில் கலசப்பாக்கம் பகுதியில் சேர்ந்த ஷாஜகான். வேட்டவலம் ரோடு பகுதியை சேர்ந்த யுவராஜ். கீழ்பெண்ணாத்தூர் கடம்பை பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லா. மற்றும் சத்யராஜ் என தெரியவந்தது இவர்களை போலீசார் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர் படுத்தி கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu