செங்கம் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

செங்கம் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
X

பெட்ரோல் குண்டு வீசியதால் தீயில் கருகிய இருசக்கர வாகனம்

செங்கத்தில் திமுக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில், இருசக்கர வாகனம் சேதம்.

திருவண்ணாமலை, செங்கத்தில் திமுக பிரமுகர் விஜயகுமார் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டின் வாசலில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் கருகியது. மேலும், வீட்டு உபயோகப் பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதற்கிடையே, தகவல் அறிந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திமுக பிரமுகர் விஜயகுமாருக்கு முன்விரோதம் உள்ளதா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!