செங்கம் அருகே பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியால் மக்கள் அச்சம்

செங்கம் அருகே பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியால் மக்கள் அச்சம்
X

பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

செங்கம் அருகே பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியால் அச்சம் நிலவுகிறது. உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல் வணக்கம் பாடி ஊராட்சியில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர் சேர்க்கை தொட்டி கட்டப்பட்டு அதில் தண்ணீர் தேக்கி ஊராட்சி நிர்வாகம் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அடிப்பகுதி தூண்கள் சேதமடைந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து உள் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் தண்ணீர் மேலே இருக்கும் போது அதனுடைய பாரம் தாங்காமல் நீர் தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளதாக பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .

மேலும் நீர் தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதால் அதிலிருந்து நீர் அதிக அளவில் கசிகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உடனடியாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கமண்டல நாக நதி ஆற்றில் பாசன கால்வாய் தூர்வாரப்படாததால் சாலைகளில் வழிந்து செல்லும் ஆற்று நீர்

ஆரணியை அடுத்த குன்னத்தூர் பகுதியில் கமண்டல நாக நதி ஆற்றில் இருந்து பல்வேறு கிராமப்பகுதியில் உள்ள ஏரிகளுக்கு செல்லக்கூடிய பாசன கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால் கடந்த 2 நாட்களாக சாலைகளில் ஆற்று நீர் வழிந்து செல்கிறது.

இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் ஏரிகளுக்கும் பாசனப்பகுதிகளுக்கும் செல்ல வழிவகை செய்ய பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story