விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்

விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்
X
சட்டவிரோத மின்வேலி (பைல்படம்).
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

காப்புக்காட்டின் ஓரங்களில் இருக்கும் பட்டா நிலங்களில் வனவிலங்குகளை கொல்வதற்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பது வழக்கமாகி வருகிறது. இதனால் வனவிலங்குகள் பலியாவதோடு மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இவற்றைத் தடுக்கும் வகையில் திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் திருவண்ணாமலை வனச்சரகத்தில் காம்பிங் ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டது.

திருவண்ணாமலை தாலுகா வாணாபுரம் கிராமத்தில் ரமேஷ் (வயது 30) என்பவர் அவரது பட்டா நிலத்தில் வன விலங்குகளை கொல்வதற்காக சட்டவிரோதமாக மின் வேலி அமைத்திருந்ததை கண்டறிந்து அதனை அகற்றினர்.

இதையடுத்து அவரை வனத்துறையினர் பிடித்து அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் மின்வேலி அமைத்த விவசாயி மின் இணைப்பை துண்டிக்க வாணாபுரம் மின் பொறியாளருக்கு வனத்துறையின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி