/* */

செங்கத்தில் தூய்மைப் பணியாளரிடம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது

செங்கத்தில் தூய்மைப் பணியாளரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி பெண் செயலாளர் கைது

HIGHLIGHTS

செங்கத்தில் தூய்மைப் பணியாளரிடம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது
X

செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காயம்பட்டு ஊராட்சியில் செயலாளராக ஸ்ரீதேவி பணியாற்றி வருகிறார். அதே ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் இந்திரா என்பவருக்கு 2017 முதல் 2020 வரை 32 மாதத்திற்கான சம்பள நிலுவை தொகை ரூபாய் 24,940 வழங்கவேண்டுமென செயலாளரிடம் மனு அளித்திருந்தார். அதற்கு ஸ்ரீதேவி ரூபாய் 5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து தூய்மைப் பணியாளர் இந்திரா, திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஸ்ரீதேவியிடம் அனுப்பியுள்ளனர். இந்திரா ஸ்ரீதேவியை தொடர்புகொண்டு தற்போது பணத்துடன் வருவதாக கூறியுள்ளார் அதற்கு ஸ்ரீதேவி தான் தற்போது வீட்டில் உள்ளதாகவும் அங்கு வருமாறும் கூறியுள்ளார்.

ஊராட்சிமன்ற செயலாளரின் வீட்டிற்கு சென்று பணத்தை கொடுத்துள்ளார். அப்பொழுது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஸ்ரீதேவியை கைது செய்து லஞ்ச வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்

Updated On: 30 Jun 2021 7:58 AM GMT

Related News