புதுபொலிவுடன் ஊராட்சி மன்ற அலுவலகங்கள்
புதுபொலிவுடன் ஊராட்சி மன்ற அலுவலகங்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் பொங்கல் திருநாளையொட்டி அனைவரின் பங்கேற்புடன் பல்வேறு தூய்மை பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ஒரு சிறப்பு இயக்கமாக செயல்படுமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனராக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் வர்ணம் பூசப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் அனைத்திற்கும் வண்ணம் பூசுதல் மற்றும் அலுவலக பெயர் எழுதுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கிராம ஊராட்சிகளில் உள்ள நீர் தேக்க தொட்டிகளை மாதம் இருமுறை சுத்தம் செய்திட வேண்டும் என்ற வகையில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு முன்பு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் போன்றவற்றை ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பணி புரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் மற்றும் இதர பணியாளர்களை ஈடுபடுத்தி சுத்தம் செய்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஊராட்சி மன்ற கட்டிடங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டிடங்களில் தேவையின்றி இருக்கும் பழைய பயன்படுத்த இயலாத குப்பையாக கிடக்கும் பின் பொருட்களை அகற்றி அலுவலகங்கள் சுத்தம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் வேம்பு, புங்கன், மா ,கொய்யா போன்ற பலன் தரும் மரங்கள் மற்றும் பாதுகாப்பு வலையங்கள் ஆகியவற்றை வனத்துறை மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து பெற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரம் நடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu