செங்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி: எம்எல்ஏ துவக்கிவைப்பு

செங்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி: எம்எல்ஏ துவக்கிவைப்பு
X

ஒட்டுமொத்த துப்புரவு பணியை சட்டமன்ற உறுப்பினர் கிரி துவக்கி வைத்தார்.

செங்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி சட்டமன்ற உறுப்பினர் கிரி துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி துவங்கப்பட்டது.

பணி தொடக்க நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் சாதிக் பாஷா தலைமை வகித்தார். கவுன்சிலர் சந்தியா முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு ஒட்டுமொத்த துப்புரவுப் பணியை தொடங்கிவைத்தார்.

பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு சிறு மின்விசை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்தல், கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சரி செய்தல், மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் பேரூராட்சி முன்னாள் தலைவர் சென்னம்மாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராமஜெயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!