புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு
X

புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிரி , எம்எல்ஏ திறந்து வைத்தார்   

செங்கம் அருகே புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

செங்கம் அருகே ரூபாய் 23 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் புழுதியூர் பகுதியில் ரூபாய் 23 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் மூலம் புதியதாக ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவில் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயராணி குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் ஊராட்சி மன்ற பெயர் பலகையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் கிரி பேசுகையில்,

திமுக ஆட்சி தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் கிராமப் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி அடைகிறது. தற்போது தமிழ்நாட்டில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக ஆட்சி செய்யும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கான திட்டங்கள் குறிப்பாக பெண்களுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை, விடியல் பயணம் மூலம் இலவச பேருந்து திட்டம், பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை திட்டம், போன்ற திட்டங்கள் மூலம் அண்டை மாநிலங்களுக்கும் வழிகாட்டியாகவும் ,தமிழ்நாட்டின் திட்டங்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்றக்கூடிய திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறார் மக்களின் தேவைகளும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் தரக்கூடிய அரசு திமுக அரசு தான். என செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பேசினார்.

புதிய தார் சாலை அமைக்கும் பணி

செங்கம் தொகுதி, செங்கம் ஒன்றியத்திற்க்குட்பட்ட, மேல் பள்ளிப்பட்டு ஊராட்சியில், புதிய தார் சாலை அமைக்கும் பணியினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி , திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஏழுமலை, செந்தில்குமார், நகர திமுக செயலாளர் அன்பழகன், ஒன்றிய குழு தலைவர்கள் ,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!