செங்கம் அருகே ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள் திறப்பு

செங்கம் அருகே ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள் திறப்பு
X

ரேஷன் கடைகளை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கிய எம்பி அண்ணாதுரை மற்றும் எம்எல்ஏ கிரி

செங்கம் அருகே ரேஷன் கடைகள் அங்கன்வாடி மையங்களை எம்பி., எம்எல்ஏ திறந்து வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சி, சேரந்தாங்கல் மற்றும் மேல் பள்ளிப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட இரண்டு புதிய நியாய விலை கடைகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கியும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

பெரும்பாக்கம் ஊராட்சியில் ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் ஊராட்சியில் ஆதர்ஷ் கிராம யோஜனா பாராளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்ட முகாம் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தலைமையில் நடைபெற்றது.

இத்திட்ட முகாமில் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று விரைவில் அதற்கான உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் .

தொடர்ந்து செங்கம் தொகுதி தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 5.75 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்ட நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மனோகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார் ,சகுந்தலா ராமஜெயம், கூட்டுறவு சங்க தலைவர் முருகன் ,ஒன்றிய குழு தலைவர்கள் விஜயராணி குமார், பரிமளா கலையரசன், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாரதி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஏஞ்சல் ராணி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை , மாவட்ட பிரதிநிதிகள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள்,மாவட்ட கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!