செங்கம் அருகே ரூ. ஒரு லட்சம் பறிமுதல்..!

செங்கம் அருகே ரூ. ஒரு லட்சம் பறிமுதல்..!
X

வட்டாட்சியரிடம் பிடிபட்ட பணத்தை ஒப்படைத்த தேர்தல் பறக்கும் படையினர்

செங்கம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலா்கள் நடத்திய சோதனையில் ஒரு லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது

செங்கம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலா்கள் நடத்திய சோதனையில் ஒரு லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன என்பதும் குறிப்பாக ரூ.50,000 க்கு அதிகமாக ரொக்க பணம் எடுத்துச் சென்றால் தகுந்த ஆவணங்கள் காட்ட வேண்டும் என்றும் இல்லையென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள வரை, உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லவதை தடுக்க, சோதனை சாவடிகள், பறக்கும் படை குழுவினர், நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குப்பந்தாங்கல் பகுதியில் தேர்தல் பறக்கும்படை குழுவைச் சேர்ந்த அலுவலா் மிருளாலினி தலைமையிலான குழுவினா் நேற்று மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தண்டராம்பட்டு பகுதியில் இருந்து செங்கம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில், உரிய ஆவணம் இன்றி ரூ. ஒரு லட்சம் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, காரில் இருந்த இருவரிடம் விசாரணை நடத்தியபோது, அவா்கள், தண்டராம்பட்டு வட்டம், அப்பநாயகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன்கள் ஜெயச்சந்திரன் , காா்த்திகேயன் எனத் தெரிவித்தனா். பணம் குறித்து அவா்களிடம் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனா். இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து செங்கம் வட்டாட்சியா் முருகனிடம் தேர்தல் பறக்கும்படை அதிகாரி மிருளாலினி ஒப்படைத்தாா். பின்னா், அந்தப் பணம் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!