தாமதமாக வந்ததற்கு விவசாயிகளிடம் மன்னிப்பு கோரிய அதிகாரி

தாமதமாக வந்ததற்கு விவசாயிகளிடம் மன்னிப்பு கோரிய அதிகாரி
X

தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கோரும் துணை ஆட்சியர் பார்த்திபன்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு காலதாமதமாக வந்த அதிகாரி விவசாயிகளிடம் இருகரம் கூப்பி மன்னிப்புக் கோரினார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முப்பது அதிகாரிகள் பங்கு பெறவேண்டிய இடத்தில் மூன்றே அதிகாரிகள் கலந்து கொண்டதால் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

யூரியா தட்டுப்பாட்டிற்கு உரிய பதிலில்லாத காரணத்தாலே அதிகாரிகள் கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை எனகூறி கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர்.

இதனிடையே, குறைதீர் கூட்டத்திற்கு காலதாமதமாக வருகை தந்த ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட துணை ஆட்சியர் பார்த்திபன், வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் கரம் கூப்பி காலதாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொன்டதன் பேரில் விவசாயிகள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு