சாத்தனூர் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட சென்ற இரண்டு பேர் கைது

சாத்தனூர் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட சென்ற இரண்டு பேர் கைது
X
சாத்தனூர் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்

சாத்தனூர் வனச்சரகம் பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் வன பாதுகாவலர் பத்மா அறிவுரையின்படியும், திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் யோகேஷ் உத்தரவின்படியும், அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் சாத்தனூர் வன சரகம் பெண்ணையாறு காப்புக்காடு சொற்பநந்தல் மேற்கு பீட் காப்பு காட்டில் சாத்தனூர் வன சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையில் வனக்காப்பாளர்கள் ரவி, முருகன், வெங்கடேசன், பலராமன், ஆகிய ஐந்து பேர் கொண்ட குழு வனவிலங்கு வேட்டை தடுப்பு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஜமுனா மத்தூரை சேர்ந்த குபேந்திரன் என்பவர் உருவம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு செங்கம் தாலுக்கா மண்ணடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பவுன் குமார் என்பவரை அழைத்துக் கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக தென்பண்ணை ஆறு காப்புக்காட்டில் சுற்றி திரிந்த பொழுது வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!