புதிய குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ..!

புதிய குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ..!
X

பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்த கிரி எம் எல் ஏ

செங்கம் அருகே புதிய குடிநீர் மேல்நிலை நீர் சேர்க்கத் தொட்டி பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

செங்கம் அருகே ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் புதியு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பணிகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சி , மற்றும் சின்ன காயம் பட்டு ஊராட்சியில் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு மேல்நிலை நீர் சேர்க்கை தொட்டி அமைத்து தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கிரி இடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15-வது நிதி திட்டத்தின் அடிப்படையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூபாய் 15 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து சின்ன காயம் பட்டு பகுதியில் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்தும் பள்ளியின் கட்டமைப்பு குறித்தும் ஆய்வு மேற் கொண்டார் . பின்னர் ஆசிரியர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பேசுகையில்,

'பள்ளிக்கு விரைவில் சுற்றுச்சுவர் அமைத்து தரப்படும். பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் உள்ளடக்கிய முன்மாதிரி பள்ளி கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தெரிவிக்குமாறு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், மனோகரன் செந்தில்குமார். வீரபத்திரன் , ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், துணைவன், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், அவை தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர், கட்சி நிர்வாகிகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஒன்றிய செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!