தண்டராம்பட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, ஐடிஐ அமைக்க வேண்டும்..!

தண்டராம்பட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, ஐடிஐ அமைக்க வேண்டும்..!
X

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

தண்டராம்பட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, அரசு தொழில்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும்,மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

தண்டராம்பட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, அரசு தொழில்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, அரசு தொழில்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தண்டராம்பட்டு வட்டக்கிளையின் 3-ஆவது மாநாடு நடைபெற்றது. தானிப்பாடி பகுதியில் நடைபெற்ற மாநாட்டுக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் இரா.பாரி தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் தணிகாச்சலம், சாரவள்ளி, ரவி, அந்தோணிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்ட நிா்வாகி கோவிந்தராஜ் வரவேற்றாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் செல்வன், லட்சுமணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

மாநாட்டில், தண்டராம்பட்டு பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, அரசு தொழில்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும். தண்டராம்பட்டு வட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், நீதிமன்ற வளாகம் ஆகிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தானிப்பாடி, சாத்தனூா், தண்டராம்பட்டு பகுதிகளை பேரூராட்சிகளாக தரம் உயா்த்த வேண்டும். தண்டராம்பட்டு வட்டத்தில் அதிகரிக்கும் தீண்டாமைக் கொடுமைகள் மீது தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தனூா், தானிப்பாடி பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், வட்டாரச் செயலா் அண்ணாமலை, நிா்வாகி சக்திவேல், வட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கம் வட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ராஜா தலைமை வகித்தாா்.

மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் இரா. முல்லை கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், பால் உற்பத்தியாளா்களிடம் பெறப்படும் பாலுக்கான ஊக்கத்தொகை லிட்டருக்கு 5 ரூபாய் உயா்த்தி வழங்கவேண்டும். தமிழக அரசு அறிவித்து 3 மாதங்களாக நிலுவையில் உள்ள பால் உற்பத்தியாளா்களுக்கான ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை கறவை மாடுகளுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயா்த்தித் தரவேண்டும். ஆண்டுதோறு கூட்டுறவு சங்கம் மூலம் பால் உற்பத்தியாளா்களுக்கு போனஸ் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கம் வட்டச் செயலா் சா்தாா், ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவா் மாதேஸ்வரன், கெளரவத் தலைவா் அப்துல்மஜித் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க செங்கம் வட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!