செங்கம் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி!

செங்கம் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த  எம்பி!
X

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய அண்ணாதுரை எம்பி

செங்கம் பகுதியில் கிராமங்களில் வாக்காளர்களுக்கு எம்பி நன்றி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை நன்றி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேற்கு ஒன்றிய பகுதிகள் மற்றும் காயம் பட்டு சென்னசமுத்திரம் மேல் பள்ளிப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை நன்றி தெரிவித்தார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக இரண்டாவது முறையாக அண்ணாதுரை களம் கண்டார். அதனைத் தொடர்ந்து அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தலைமையில் செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் முன்னிலையில் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பேசுகையில்,

தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். அடித்தட்டு மக்களின் தேவைகளை அறிந்து கடைகோடி மக்கள் வரை அரசின் திட்டங்கள் கொண்டு செல்வதால் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார்.

இதனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அதிகப்படியான வாக்களித்து அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி முழுவதும் மக்களின் அடிப்படைத் தேவைகள் சென்று அடைந்ததால் அதிக வாக்கு வித்தியாசத்தில் நமது நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வெற்றி பெற்றுள்ளார் என பேசினார்.

இதனைத் தொடர்ந்து நன்றி தெரிவித்து அண்ணாதுரை எம்பி பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உலகில் வேறு எங்குமே அறிவிக்கப்படாத அரசின் திட்டங்கள் அறிவித்து குறிப்பாக பெண்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து வசதி, மாதம் தோறும் கலைஞர் உரிமைத்தொகை, கல்லூரி மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் என பல்வேறு திட்டங்கள், காலை சிற்றுண்டி திட்டங்கள் போன்ற திட்டங்கள் மூலம் மக்களை சிந்திக்க வைக்க கூடிய திட்டங்கள் அறிவித்து அனைத்து திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக உள்ளார்.

மேலும் கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திருவண்ணாமலை மக்களுக்காகவும் அவர்களின் தேவைக்காக அதிக கேள்வி எழுப்பக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களின் முதன்மையான உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

மத்திய அரசியலில் இருந்து வரக்கூடிய நிதிகள் அனைத்தும் முறையாக அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்தது போன்ற திட்டங்களால் தான் இரண்டாவது முறையாகவும் மக்கள் ஆதரவோடு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாதுரை எம்பி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர், ஒன்றிய அவைத் தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி கழக நிர்வாகிகள், ஒன்றிய அமைப்பாளர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக தொண்டர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!