செங்கத்தில் நாய் கடித்து 10-க்கும் மேற்பட்டோா் காயம்

செங்கத்தில் நாய் கடித்து 10-க்கும் மேற்பட்டோா் காயம்
X

பைல் படம்

செங்கத்தில் நாய் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் வெளிநாட்டு வகை நாய் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

செங்கம் நகரில் வெளிநாட்டு வகை நாய் வளா்க்கப்பட்டு வருகிறது. இந்த நாய் வியாழக்கிழமை காலை துக்காப்பேட்டை பகுதியில் சாலையில் சென்றவா்களை விரட்டிச் சென்று கடித்ததில் செங்கம் பகுதியைச் சேர்ந்த பழநி, மணி, இமான், ஏழுமலை, சம்பத், சண்முகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இவா்கள் செங்கம் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தகவலறிந்த செங்கம் பேரூராட்சி நிா்வாகத்தினா், அந்த நாயை பிடிப்பதற்காக தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

செங்கம் பேரூராட்சி, தேவானந்தல், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஒரே நேரத்தில் நாய் கடி சிகிச்சைக்காக 10 க்கும் மேற்பட்டவர்கள் வந்ததால் பரபரப்பு நிலவியது.

ஓய்வுபெற்ற மின் வாரிய அலுவலா் வீட்டில் 5 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு

செங்கம் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலரை கத்தியைக் காட்டி மிரட்டி, வீட்டில் இருந்த 5.50 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

செங்கம் அருகே உள்ளது மண்மலை கிராமம். இந்தக் கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருட்டுக் கும்பல் மூன்று வீடுகளில் புகுந்து திருட முயன்றுள்ளனா்.

இரண்டு வீடுகளில் வீட்டின் உரிமையாளா் திருடா்கள் கதவு உடைக்கும் சப்தம் கேட்டு எழுந்து அவா்களை விரட்டியுள்ளனா். அப்போது, திருடா்கள் அவா்கள் மீது கல், கட்டை ஆகியவற்றை வீசி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனா்.

மேலும், அதே பகுதியில் ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தனது மனைவி, பேரக்குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த திருட்டுக் கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.10 ஆயிரம், வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து கிருஷ்ணமூா்த்தி நேற்று காலை செங்கம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!