பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்

பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்
X

பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கிய செங்கம் எம் எல் ஏ கிரி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பினை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினார்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா "பொங்கல் ரொக்கப் பணம் ரூ.1000/-த்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம்" ஆகியவை கொண்ட "பொங்கல் பரிசு தொகுப்பு" வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பினை பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் உள்ள தண்டராம்பட்டு, பெரிய கோலாப்பாடி, மேல்ரா வந்த வாடி, கிருஷ்ணாபுரம், தானிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் சாதிக் பாஷா, நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் ,பேரூராட்சி தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்ட வழங்கல் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

கலசப்பாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மேல் தெருவில் தமிழர் திருநாளை முன்னிட்டு பொங்கல் திருவிழா சிறப்பான முறையில் கொண்டாடுவதற்காக பொங்கல் தொகுப்பு பரிசினை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழக மக்கள் சிறப்பான முறையில் பொங்கலை கொண்டாட வேண்டும் என்பதற்காக அதுவும் குறிப்பாக இந்த பொங்கல் திருவிழா தமிழர் திருவிழா தமிழர்களின் பாரம்பரிய திருவிழா என்பதால் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கி நமது முதல்வர் அறிவித்துள்ளார். அவருக்கு நாம் நமது நன்றியை தெரிவிக்க வேண்டும்.

இந்த பொங்கல் தொகுப்பு பரிசு மூலம் மக்கள் சிறப்பான முறையில் பொங்கல் கொண்டாடலாம். பொங்கல் தொகுப்பு பரிசு எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் அனைவருக்கும் இந்த திட்டம் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்துள்ளார் என எம் எல் ஏ சரவணன் பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் ,தாசில்தார் ராஜராஜேஸ்வரி , மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வந்தவாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்கும விழா கூட்டுறவு சங்கங்களின் சார் ஆட்சியர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தனர். நகர மன்ற உறுப்பினர் கிஷோர் குமார் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் தரணி வேந்தன் மற்றும் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர் பயனாளிகளுக்கு விலையில்லா பொங்கல் தொகுப்பு மற்றும் வேட்டி சேலைகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய சர்க்கரை ஆலை இயக்குனர் தரணி வேந்தன், மக்களுக்கான ஆட்சி என்றும் திமுக ஆட்சி தான் .மக்களை தேடி வரும் ஆட்சி திமுக ஆட்சி தான். தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்தையும் நிறைவேற்றி வருவதும் திமுக ஆட்சி தான் என கூறினார்.

வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் பேசுகையில், தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்கள் தமிழர்களின் ஒப்பற்ற பண்பாட்டு திருநாளாம் உழவர் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வண்ணம் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் பொங்கல் பரிசை நமது முதல்வர் வழங்கி வருகிறார் ,ஏழை எளிய மக்களின் அரசு திமுக அரசு தான் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் , வட்ட வழங்கல் அதிகாரிகள் பயனாளிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil