செங்கம் அருகே நியாய விலை கடைகளை திறந்து வைத்த எம்எல்ஏ
புதிய நியாய விலை கடை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கிய கிரி எம் எல் ஏ
செங்கம் அருகே ரூபாய் 57 லட்சம் மதிப்பில் 3 புதிய நியாய விலை கடைகள் மற்றும் ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆணைமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய நியாய விலை கடை மற்றும் காரியமங்கலம் பகுதியில் ஊரக வளர்ச்சி திட்ட மூலம் ரூபாய் 12 லட்சத்தில் புதிய தானிய கிடங்கு அமைப்பதற்கு பூமி பூஜை செய்து வைத்தும், ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் திட்ட மூலம் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி எப்பொழுதெல்லாம் அமைகிறதோ அப்போதெல்லாம் கிராம பகுதி நகர பகுதிக்கு இணையாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. கிராம மக்கள் முன்னேற்றம் அடைவதற்கு திமுக ஆட்சி தான் உறுதுணையாக இருந்து வருகிறது என தெரிவித்தார்.
பின்னர் ஆணைமங்கலம் பகுதியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திமுக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் அன்பழகன், பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் அருள்ஜோதி மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் , வருவாய்த்துறை அதிகாரிகள், திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செங்கம் தொகுதி தண்டராம்பட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கி,ரி கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் , ஒன்றிய செயலாளர் வேலு , மாவட்ட பிரதிநிதிகள் , ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu