ஜவ்வாது மலை ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

ஜவ்வாது மலை ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு
X

பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி நியாய விலைக் கடையை திறந்து வைத்த கிரி எம் எல் ஏ

ஜவ்வாது மலை ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடை கட்டடங்களை எம்எல்ஏ திறந்து வைத்தார்

செங்கம் அருகே ஜவ்வாது மலை ஒன்றியத்தில் ரூபாய் 57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை எம்எல்ஏ கிரி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி ஜவ்வாது மலை ஒன்றியம் கள்ளத்தூர் ஊராட்சி துருஞ்சி குப்பம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை மற்றும் கிளையூர் கிராமத்தில் ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் ஆகியவற்றினை செங்கம் எம்எல்ஏ கிரிபன் வெட்டியும் குத்து விளக்கேற்றியும் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கிளையூர் ஊராட்சியில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் புதிய பேப்பர் பிளாக் சாலை மற்றும் புதிய நியாய விலை கடை அமைப்பதற்கு எம்எல்ஏ கிரி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

துருஞ்சி குப்பம் கிராமத்தில் பொதுமக்கள் நீண்ட காலமாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கும் நிலை இருந்து வந்தது. பின்னர் சட்டமன்ற உறுப்பினராகிய நான் எடுத்த முயற்சியால் கள்ளத்தூர் ஊராட்சி துரிஞ்சிகுப்பம் பகுதிக்கு தனியார் கட்டிடத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறக்கப்பட்டது,

அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நியாய விலை கடைக்கு ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எம்எல்ஏ கிரி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஜவ்வாது மலை தெற்கு ஒன்றிய செயலாளர் சிவசேமன், ஊராட்சி மன்ற தலைவர் சிவானந்தம், புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சகுந்தலா ராமஜெயம், வட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நியாய விலை கடை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று கிளையூர் பகுதியில் ரூ.17 லட்சத்தில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றினை கிரி எம் எல் ஏ திறந்து வைத்தார்

Tags

Next Story