குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை அமைச்சர் வேலு வழங்கினார்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை அமைச்சர் வேலு வழங்கினார்
X

குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ வ.வேலு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் வேலு வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ வ.வேலு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் , செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார், கூடுதல் ஆட்சியர் பிரதாப் , கூட்டுறவு சங்கங்களின் திருவண்ணாமலை மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!