மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்
X

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்பி., அண்ணாதுரை மற்றும் எம்எல்ஏ கிரி. 

செங்கத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை அண்ணாதுரை எம்.பி. வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ நிறுவனம் ஆகியவை இணைந்து செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செங்கத்தில் நடைபெற்றது.

எம்எல்ஏ கிரி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக எம்பி., அண்ணாதுரை கலந்து கொண்டு ரூ.50 லட்சம் மதிப்பில் 519 மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, செல்போன், ஊன்றுகோல், காதொலி கருவி, செயற்கை கால் உள்பட பல்வேறு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர், தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளி மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் முழுமையாக சென்றடைந்து பயனடைய வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகின்றனர் என்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயராணி குமார், பரிமாள கலையரசன், துணைத்தலைவர்கள் சுமதிபிரபாகரன், பூங்கொடி நல்லதம்பி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!