குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை கடத்திச் சென்ற நபர் கைது

குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை கடத்திச் சென்ற   நபர் கைது
X

குட்கா கடத்தியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட நபர்

செங்கம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை கடத்திச்சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆர்.சின்னராஜ் மேற்பார்வையில், மேல்செங்கம் வட்ட காவல் ஆய்வாளர் எம்.செல்வராஜ் தலைமையில் தனிப்படை காவலர்கள் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கே.கே. நகரைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் கண்ணக்குருக்கை அருணை வித்யா கல்லூரி பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை இரண்டு சக்கர வாகனத்தில் கடத்தி சென்றவரை கைது செய்து, பாச்சல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

அவரிமிருந்து, ஹான்ஸ் - 675 பாக்கெட் என மொத்தம் 27000 ரூபாய் மதிப்பிலான 13 1/2 கிலோ குட்கா பொருட்கள், மற்றும் 01 இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, கண்ணக்குருக்கை கிராமத்தை சேர்ந்த வினோத், என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்