தொலைந்த செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் மீட்ட காவல் துறையினர்

தொலைந்த செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் மீட்ட காவல் துறையினர்
X

தொலைந்துபோன போன செல்போனை ஒருமணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை 

செங்கம் அருகே தொலைந்த செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் மீட்ட காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்

செங்கம், தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்பவர் புதுப்பாளையத்தில் தனது செல்போன் தொலைந்து விட்டதாக புதுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரையடுத்து, புதுப்பாளையம் உதவி ஆய்வாளர் லதா தலைமையிலான காவலர்கள் விரைந்து செயல்பட்டு காணாமல் போன செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.

விரைவாக செயல்பட்டு காணாமல் போன செல்போனை கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் பாராட்டு தெரிவித்தார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா