திருவண்ணாமலை மாவட்டத்தில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

செங்கத்தில் நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
Language War Martyrs Valedictory டே Public Meet
திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக சார்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்டம் மாணவரணி அமைப்பாளர் காலேஜ் ரவி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில இலக்கிய அணி இணை செயலாளர் ஈரோடு இறைவன், தலைமை கழக பேச்சாளர் மயிலாடுதுறை அருள்தாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பொதுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து ,மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் பிரியா விஜய ரங்கன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட அமைப்பாளர்கள் நேரு ஆறுமுகம், விஜயராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் செங்கத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளர் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தலைமை வகித்தார்.
தலைமைக் கழக பேச்சாளர்கள் பவானி கண்ணன் செங்கை சந்தானம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் அன்பழகன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ரமேஷ், செந்தில்குமார், ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, பிரபாகரன் மற்றும் மாவட்ட ஒன்றிய ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள தாலுகா அலுவலகம் எதிரில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக பேச்சாளர்கள் நாத்திகம் நாகராஜன், எழும்பூர் கோபி ஆகியோர் பேருரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ சரவணன் பேசுகையில், கலசப்பாக்கம் தொகுதி கடந்த 20 ஆண்டு காலமாக பின் தங்கிய தொகுதியாக இருந்தது. ஆனால் இந்த திமுக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அதிக அளவு வழங்கி கலசப்பாக்கம் தொகுதியை வளர்ச்சியான தொகுதியாக மாற்றி வருகிறோம்.
பல்வேறு வளர்ச்சி பணிகளை கலசப்பாக்கம் தொகுதிக்காக தமிழகம் முதல்வர் ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய நானும் தொகுதிக்காக அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து கலசப்பாக்கத்தை வளர்ச்சியான தொகுதியாக மாற்றுவதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறோம் என சரவணன் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், இளைஞர் அணி அமைப்பாளர்கள், மாவட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வந்தவாசி
வந்தவாசி கோட்டை மூலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தரணிவேந்தன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் இராதா, இளங்கோவன், பெருமாள், நகா்மன்றத் தலைவா் ஜலால் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் தயாளன் வரவேற்றாா்.
மாநில மருத்துவரணி அமைப்பாளா் எழிலன் எம்எல்ஏ, வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் , கழக நிர்வாகிகள் , மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu