செங்கம் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்த ஏரி நீர்

செங்கம் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்த ஏரி நீர்
X

பள்ளியில் தேங்கியுள்ள வெள்ள நீர்

தொடர் மழை காரணமாக செங்கம் அருகே கெங்கம்பட்டி ஏரி நிரம்பிய நிலையில், வெள்ள நீர் அரசு பள்ளிக்குள் புகுந்துள்ளது

செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கெங்கம்பட்டு பகுதியில் உள்ள கெங்கம்பட்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் செல்ல வழி இல்லாததால் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் புகுந்தது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வெள்ளநீர் வடியும் வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு பள்ளி வளாகத்திற்குள் உள்ள நீரை உடனே வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு