21 அடி முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்

21 அடி முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்
X

21 அடி முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

https://www.maalaimalar.com/news/district/tiruvannamalai-news-kumbabhishekam-to-21-feet-murugan-statue-478391?infinitescroll=1

Murugan Temple - செங்கம் அருகே 21 அடி முருகன் சிலைக்கு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Murugan Temple -செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் அடுத்த தொரப்பாடி, நரசிங்கநல்லூர் கிராமங்களுக்கு இடையே உள்ள பூமலையில் ஸ்ரீபாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலய நுழைவு வாயிலில் அமைந்துள்ள ஸ்ரீஇடம்புரி விநாயகர் மற்றும் அதன் அருகில் புதிதாக அமைக்க ப்பட்டுள்ள 21 அடி பிரம்மாண்ட பூமலை முருகன் சிலைக்கு மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு பூமலை அடிவாரம் ஊர்பொதுமக்கள் உள்பட சுற்றுவட்டார பகுதியில் உள்ள இறையூர், அம்மாபாளையம், பாய்ச்சல், முடியனூர், வாசுதேவன்பட்டு மேலபுஞ்சை, படிஅக்கரகாரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மகா கும்பாபிஷேக புனித கலசநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழா குழுவினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!