மாவட்டத்தில் அதிக நலத்திட்டங்களை பெற்றது கலசப்பாக்கம் தொகுதி தான்: அமைச்சர் வேலு

மாவட்டத்தில் அதிக நலத்திட்டங்களை பெற்றது கலசப்பாக்கம் தொகுதி தான்: அமைச்சர் வேலு
X

பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக நலத்திட்டங்களை பெற்றது கலசப்பாக்கம் தொகுதி தான் என்று அமைச்சர் வேலு கூறினார்

முடியாததை முடித்து காட்டும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில் திறப்பு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பெருமிதமாக பேசினார்.

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய கலைஞர் நூற்றாண்டு நுழைவாயில் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,

கலசபாக்கம் தொகுதிக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து நல திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் கலசபாக்கம் தொகுதிக்கு மட்டும் இந்த 3 ஆண்டில் எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு அலுவலகம் சிறப்பாக செயல்படுகிறதா என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்த நுழைவாயில் மூலம் தெரிந்து கொள்ளலாம் . நுழைவாயில் சிறந்த முறையில் இருந்தால் அதன் உள்புறம் உள்ள அலுவலகமும் சிறப்பான முறையில் இருக்கும். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கு 10 இடங்களை தேர்வு செய்த நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஒரு சிறு விளையாட்டு அரங்கம் வழங்கப்படுகிறது.

அந்த விளையாட்டு அரங்கத்தை எந்த தொகுதிக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது உடனடியாக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் என்னிடம் வந்து கலசபாக்கம் தொகுதிக்கு இந்த சிறு விளையாட்டு அரங்கம் வழங்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான் எந்த ஒரு மறுப்பும் கூறாமல் கலசபாக்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருவேங்கடம் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொகுதி அந்த 4 முறையும் கழக ஆட்சியில் தான் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றது. அதன் பிறகு எந்த ஒரு வளர்ச்சி பணியும் சரியாக நடைபெறவில்லை

அதனால் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கலசபாக்கம் தொகுதிக்கு சிறு விளையாட்டு அரங்கம் வழங்க வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கூறினேன்.

அதேபோல் தமிழகத்தில் 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழங்கப்பட்டது. அதில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழங்கப்பட்டது. அதையும் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு பகுதிக்கு புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழங்கப்பட்டது. இத்தனை வளர்ச்சி பணிகளும் கலசபாக்கம் தொகுதியை வளர்ச்சியான தொகுதியாக மாற்றுவதற்காக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு கோரிக்கை நாயகன் என்ற பெயரை சூட்டி சட்டமன்ற உறுப்பினர் சரவணனும் நானும் தொகுதியை வளர்ச்சியான தொகுதியாக மாற்றுவதற்கு அதிகளவு வளர்ச்சி பணிகளை வழங்கி செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.

தொடர்ந்து பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு நிதியுதவி, இலவச மனைப் பட்டா, மலைவாழ் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் உள்ளட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இவ்விழாவில் திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், ஒன்றிய குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!