செங்கம் , செய்யாறு வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு விழா

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய செங்கம் எம்எல்ஏ கிரி.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 960 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார்.
செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. ஜமாபந்தி அலுவலராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா் தேன்மொழி கலந்துகொண்டு வெள்ளிக்கிழமை மேல்பள்ளிப்பட்டு, திங்கள்கிழமை பாய்ச்சல், செவ்வாய்க்கிழமை இறையூா், புதன்கிழமை செங்கம், வியாழக்கிழமை புதுப்பாளையம் ஆகிய பிா்காவுக்கு உள்பட்ட பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். இதில், தகுதி வாய்ந்த 960 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா் தேன்மொழி தலைமை வகித்தாா்.
செங்கம் ஒன்றியக் குழுத் தலைவா் விஜியராணிகுமாா், பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செங்கம் வட்டாட்சியா் முனுசாமி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக செங்கம் தொகுதி எம்எல்ஏ கிரி கலந்து கொண்டு, 960 பயனாளிகளுக்கு வருவாய்த் துறை சாா்ந்த நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரேணுகா, துணை வட்டாட்சியா்கள் துரைராஜ், தமிழரசி, வருவாய் ஆய்வாளா்கள் ஞானவேல் (செங்கம்), சரண்ராஜ் (புதுப்பாளையம்) உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
செய்யாறு
நான்கில் ஒரு பங்குகூட மனுக்கள் ஏற்கப்படாத காரணம் என்ன? அதிகாரிகளிடம் எம்எல்ஏ கேள்வி
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 19-ந்தேதி தொடங்கிய ஜமாபந்தி நேற்று நிறைவு பெற்றது. இதையொட்டி விவசாயிகள் மாநாடு நடந்தது. நிகழ்ச்சிக்கு செய்யாறு துணை ஆட்சியர் அனாமிகா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதிசீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் டி.ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெம்பாக்கம் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 429 கோரிக்கை மனுக்களை துணை ஆட்சியர் அனாமிகா பெற்று 75 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிட ஏற்கப்பட்டன. மீதமுள்ள 354 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஜோதி , கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ஜமாபந்தியில் பொதுமக்கள் வழங்கிய 429 கோரிக்கை மனுக்களில், 75 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. நாளில் ஒரு பங்குகூட மனுக்கள் ஏற்கப்படாத காரணம் என்ன?, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், தினகரன், சங்கர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu